Jun 6, 2009

பாடல் 9:ஆட்கொண்ட தெய்வம்

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
ஆமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தூங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே - தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே - என்னை விட்டு

4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே
~

பாடல் 8:அன்பு கூறுவேன்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 4

1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே (2)
இதுவரையில் உதவினீரே - உம்மை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 2

2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

3. யெகோவா ராப்பா யெகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

பாடல் 7:அனைத்தையும் செய்து முடிக்கும்

அனைத்தையும் செய்து முடிக்கும்
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்ற முடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம

2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்கொண்டேன்

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே - என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே
எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

பாடல் 6:அதிகாலை நேரம்

அதிகாலை நேரம்
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4. நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

Jun 4, 2009

பாடல் 5:உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(4)

1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(4)

Jun 3, 2009

பாடல் 4:அதிகாலை ஸ்தோத்திர பலி

அதிகாலை ஸ்தோத்திர பலி
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2

1. எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்

2. பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்

3. எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்

4. எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி

5. யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே

6. அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே

7. யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா

8. யேகோவா ஷாலோம்
சாமாதானம் தருகிறீர்
சாமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்

9. யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே

10. யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம்
யோகோவா ரஃப்பா

பாடல் 3:உம்மையே நான் நேசிப்பேன்

உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் - 3

உன்னதரே இயேசய்யா - உம்
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதி தாக்கினாலும் - 2
அசைக்கப்படுவதில்லை

பாடல் 2:ஆவியானவரே அனலாய்

ஆவியானவரே அனலாய்
ஆவியானவரே அiலாய் இறங்கிடுமே
எல்லா ஆவியின் வரங்களோடு
பலமாய் இங்கு இறங்கும் இன்று

1. வானங்கள் இன்று திறக்கட்டுமே
அபிஷேக மழையே பெய்யட்டுமே
உன்தை ஆவியை ஊற்றிடுமே
மறுரூபமாய் என்னை மாற்றிடுமே

2. பெந்தெகொஸ்தே நாளின் அனுவங்கள்
அப்படியே இன்று நடக்கட்டுமே
பலத்த காற்றின் முழுக்கம்போல் - ஒரு
வல்லமை இங்கு வீசட்டுமே

3. அக்கினி மயமான நாவுகள்
எங்கள் மேல் வந்து அமரட்டுமே
ஆவியின் வரங்கள் யாவையுமே
வெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே

4. கண்ணீர் கவலைகள் மறையணுமே
கட்டுகள் யாவும் உடையணுமே
அற்புதம் அதிசயம் நடக்கணுமே - நீர்
யார் என்று ஜனம் அறியணுமே

5. பெலத்தின் ஆவியால் நிரம்பணுமே
சாட்சிகளாய் எங்கும் வாழணுமே
எங்கள் சித்தம் மறையணுமே
தேவ சித்தம் நிறைவேறணுமே

பாடல் 1 : பாடூவோம் நம் தேவனை

பாடுவோம் நம் தேவனை
புது பாடல் பாடியே
அவர் நல்லவர் நன்மை செய்பவர்
சர்வவல்லவர் அவர் அதிசயமானவர்

1. சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே

2. கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலை தோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது

3. அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
அவர் பிள்ளையாய் நாம் மாறிட
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்: (சங்கீதம் 100 : 1,2,4)