Jan 9, 2010

இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்
இன்றும் அற்புதங்கள் நடக்குது
பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
பாவங்கள் பறந்தோடுது
உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
உந்தன் உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை (2)


1. துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள்
வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார்
விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
தேவ மகிமையை கண்டிடுவோம்


2. மந்திர சூனியம் செய்வினை கட்டுக்கள்
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
உலகத்தை நாம் கலக்கிடுவோம்


3. சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
துதியின் ஆயுதம் நமக்குள் இருந்தால்
அசுத்த ஆவியை துரத்திடுவோம்

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி

வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்


1. புகலிடம் நீரே புமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
வாழ்நாளெல்லாம்...


2. உலகமும் புமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
நல்லவரே வல்லவரே...
காலைதோறும்...


3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே...
வாழ்நாளெல்லாம்...


4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்


5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்


6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும்


7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான்


8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல

அப்பா என்னை முழுவதும்

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சாீரம் அர்ப்பணித்தேன் - என்


1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா - ஒரு


2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா


3. வாக்குவாதம் பொறாமைகள் துக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்


4. உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா)

உம்மை நாடித் தேடும் மனிதர்

உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், துயோனே உமக்கே


1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறு வாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்(மகிமை...


2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர்காட்டும் பாதையில் தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்(மகிமை...


3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு(மகிமை...


4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும் (மகிமை...

உம்மை நம்பி உந்தன் பாதம்

உம்மை நம்பி உந்தன் பாதம்
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் - 2


1.கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லாம் காத்துக் கொண்டீர்


2.மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்


3.அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே


4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்

உம் நாமம் உயரணுமே

உம் நாமம் உயரணுமே
உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)

1.அன்றாட உணவை ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா

2.பிறர் குற்றம் மன்னித்தோம்
அதனால் எங்கள் குறைகளை மன்னியுமே

3.சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா

4.ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்

5.ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே

6.ஊழியம் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே

7.உமக்காய் வாழணும் உம் குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே

8.அனுதின சிலுவையை ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா

9.ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா

10.என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே