Apr 24, 2010

போவாஸ் போவாஸ்

போவாஸ் போவாஸ்
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா உம்
அன்பினால் என்னை மூடுமையா


1.உந்தன் அடிமை நான் ஐயா - என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா


2.நிறைவான பரிசு நீர்தானையா - உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா


3.வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா


4.ஒய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை


5.கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன்


6.போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா


7.கருணைக்கண் கொண்டு நோக்குமையா - உந்தன்
கனிமொழியால் என்னைத் தேற்றுமையா


8.திருப்தியாக்கும் என் திருஉணவே
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரே

Apr 23, 2010

உங்க ஊழியம் நான் ஏன்

உங்க ஊழியம் நான் ஏன்
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

1.திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை

2.எலியாவை காகம் கொண்டு போஷத்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை

3.பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவீல் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர்இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு

4.ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

5.தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை