Dec 6, 2010

பெத்தலையில் பிறந்தவரைப்




பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்தலையில்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத்தலையில்

காரிருள் வேளையில்








காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு - காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு - காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு - காரிருள்

.ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்



Raakkaalam bethlem meyparkal Song Lyrics.

1.ராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.

2.அவர்கள் அச்சங்கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.

3.தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.

4.இதுங்கள் அடையாளமாம்
முன்னணைமீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.

5.என்றுரைத்தான் அஷணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.

6.மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்.