Mar 14, 2012

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா

 

நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

 

நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்

 

என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன்

 

நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

 

என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள் தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்

1.
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
   
தூய தேவ அன்பே 
   
இவ் வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை 
   
இனிதாய் வருந்தி அழைத்தார்

2.
கானகப் பாதை காரிருளில்
   
தூய தேவ ஒளியே 
   
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை 
   
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

3.
கிருபை கூர்ந்து மனதுருகும்
   
தூய தேவ அன்பே 
   
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை 
   
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார்

4.
இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
   
தூய தேவ தயவால் 
   
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில் 
   
கிடைக்கும் இளைப்பாருதல்

5.
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
   
தூய தேவ அருளால் 
   
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் 
   
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
 
1.தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் எங்கள்
பரிகார பலியானீர்
 
2.காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
துய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
 
3.அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
 

4.நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

 

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 4

1.
எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே (2)
இதுவரையில் உதவினீரே - உம்மை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஆராதனை ஆராதனை - 2

2.
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

3.
யெகோவா ராப்பா யெகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா - உம்மை
முழு உள்ளத்தோடு...

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

1.        அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் ப+மியில்ஆட்சிசெய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

2.
தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3.
சூரியனே, சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே, கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4.
பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர்பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

5.
ஆழ்கடலே, சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலைஅலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள

 

அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாழ மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் - 2

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

ஆருயிர் நண்பரே

 

அன்னிய பாஷைகள் இன்றே தாருமே

ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

 

ரகசியம் பேசிட கிருபை தாருமே

சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

 

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே

திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

 

பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே

பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

 

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே

சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

 

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே

சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

அப்பா பிதாவே அன்பான தேவா

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே

1.
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர்
நன்றி உமக்கு நன்றி (அப்பா)

2.
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்

3.
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே

4.
இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே

5.
ஒன்றை நான் கேட்பேன்
அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்பணி செய்திடுவேன் - நன்றி

Mar 13, 2012

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சாீரம் அர்ப்பணித்தேன் - என்


1.
உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா - ஒரு


2.
உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா


3.
வாக்குவாதம் பொறாமைகள் துக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான்


4.
உமக்காய் வாழும் வைராக்கியம் உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள் என்றோ மடிந்ததையா (செத்ததையா)

அதிகாலை ஸ்தோத்திர பலி

அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2

1.
எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர் எபிநேசர்

2.
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே
பரிசுத்தர் பரிசுத்தர்

3.
எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய் எல்ஷடாய்

4.
எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே
என்னை காண்பவரே
எல்ரோயி எல்ரோயி

5.
யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே

6.
அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே

7.
யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா

8.
யேகோவா ஷாலோம்
சாமாதானம் தருகிறீர்
சாமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்

9.
யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே

10.
யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வம்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)

அதிகாலை நேரம்
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1.
கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2.
பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே

3.
நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே

4.
நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே

5.
மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6.
விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே

அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...

தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...

இயேசு என்னும் குடும்பம் ஒன்று உண்டு

இயேசு என்னும் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

1. உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரன் இல்லை

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

2. பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

3. இன்பம் உண்டு சமாதானம் உண்டு
வெற்றி உண்டு துதிப்பாடல் உண்டு

இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்