Jan 13, 2011

ஆராதிப்போம் நம் தேவனை 2(E)

நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை 
நாவாலே என்றும் பாடு 
வல்லவர் நல்லவர் போதுமானவர் 
வார்த்தையில் உண்மையுள்ளவர்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே 

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே

இயேசென்னை இரட்சித்தார்

நான் ஆடிப் பாடுவேன்

எவரும் அறியாரே

என் உள்ளம் பொங்குதே

என் உள்ளம் பொங்கிப்

பொங்கிப் பொங்கிப்

பொங்கி வழியுதே


 ஐயா வாழ்க வாழ்க 

உம் நாமம் வாழ்க


சந்தோசம் பொங்குதே (2)
சந்தோசம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் என்னில் பொங்குதே 
 


No comments: